Editorial / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
வெலிகபொல அரசாங்க வைத்தியசாலைக்கு, அசுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுவதாக, வெலிக்கபொல பிரதேச அபிவிருத்திச் சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, குடிநீர் விநியோகத்துக்குத் தடைவிதித்துள்ள ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் வெலிக்கபொல அபிவிருத்திக் குழுவின் தலைவருமான ஜானக வக்கும்புர, சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.
வெலிக்கபொல பிரதேசத்தின் அபிவிருத்திச் சபைக் கூட்டம், நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன்போதே, அசுத்தமான குடிநீர் விநியோகம் தொடர்பில், அதிகாரிகள் சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
இப்பிரதேசத்தில் அசுத்தமான கழிவு நீரை எடுத்துச் செல்லும் நீர்க் கால்வாய், இவ்வைத்தியசாலைக்கு குடிநீரை வழங்கும் கிணற்றின் பக்கத்தில் தேங்கி நின்று நிலத்தின் கீழிறங்குவதால் இந்நீர் அசுத்தமடைவதாகவும், இந்நீரை நான்குமுறை பரீட்சித்துப் பார்த்ததில், நான்கு தடவைகளும் அந்நீர் அருந்துவதற்குப் பொருத்தமற்றது என்றே, பரிசோதனைகளில் உறுதிபடுத்தப்பட்டதாககவும் பொதுச் சுகாதார சேவை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
25 minute ago
45 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
45 minute ago
59 minute ago
2 hours ago