2026 ஜனவரி 21, புதன்கிழமை

அடிப்படை வசதிகளின்றி 38 குடும்பங்கள் பாதிப்பு

Kogilavani   / 2021 மே 03 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

தலவாக்கலை பிலிகண்டாமலை (கூம்ஸ்) தோட்டத்தில் வாழும் 38 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 120 பேர், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருகின்றனர் என்றுச் சுட்டிக்காட்டப்படுகிறது.

குடிநீர் இன்மை, போக்குவரத்து வசதியின்மை, சுகாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறுப் பிரச்சினைகளை மேற்படி மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்காக பாரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் மேற்படி குடும்பங்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தலவாக்கலையிலிருந்து குறித்தத் தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதை, உபபாதைகள் என்பன புனரமைப்பின்றி குன்றும் குழியுமாகக் காணப்படுவதால், போக்குவரத்துச் செய்வதிலும் இடர்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக மேற்படி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சுகாதார வசதிகளின்றி சிரமப்படுவதாகவும் தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, தமது தோட்டத்தில் நிலவும் அவலங்கள் குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று, தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X