Janu / 2023 மே 31 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் பசறை தேர்தல் தொகுதியின் அதிகார சபை கூட்டம் நேற்று பசறை பிரதேச சபையில் விமர்சையாக நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதியின் தொழிற்சங்க செயலாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் அசேல ஜாகொட, பேராசிரியர் அஜந்த ரத்னாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சம்பத் வித்யாரத்ன, பதுளை மாவட்ட ஐ.தே.க மகளீர் அமைப்பின் தலைவி கிரிஷானி ஜெயசேகர, வெளிமட தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் ஜானக மற்றும் பிரபல வர்த்தகர் சந்திரா ஸ்டோர்ஸ் பி. ராசையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும்,
பசறை பிரதேசிய சபையின் முன்னாள் தலைவர் ஞானதிலக, பசரை மற்றும் லுணுகலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் பசறை தொகுதி பிராதானிகள், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களும், இளைஞர் யுவதிகளும் பங்குபற்றினர்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஐ.தே.க. பசறை தொகுதி அமைப்பாளர் பிரதீபராஜா வேலாயுதமும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வேலாயுதம் ருத்திரதீபனும் ஏற்பாடு செய்திருந்தனர்.
நடராஜா மலர்வேந்தன்


7 minute ago
46 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
46 minute ago
52 minute ago
1 hours ago