2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அதிபரை இடமாற்றம் செய்வதில் பலனில்லை

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 04 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

போகாவத்தை சம்பவத்துடன் தொடர்புடைய, அதிபரை இடமாற்றம் செய்வதில் எவ்வித பயனும் இல்லை என தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், அவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் அவரை உதாரணமாக வைத்து மற்றைய அதிபர்களுக்கு பாடமாக அமைய ​வேண்டும் என்றார்.

நேற்று (3) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

 இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் மத்திய மாகாண ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

 தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் விசாரணை நிறைவு பெற்று முடிந்ததும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த வாக்குறுதி வழங்கியதாகத்  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X