Sudharshini / 2016 மார்ச் 01 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்
கண்டி, அலவத்துகொடை பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அருகில், அதிசக்திவாய்ந்த மின்சாரம் பாய்ந்ததால், அவ்வீட்டின் மின் இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீட்டிலிருந்த மின் உபகரணங்கள் அனைத்தும் சேதமாகியுள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் திங்கட்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளது. வீட்டுக்கு அருகே செல்லும் சக்திவாய்ந்த மின் கம்பம் ஒன்றிலிருந்து மின்சாரம் பாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி வீட்டுக்கு அருகில், மின்சார சபையின் ஊழியர்கள் சிலர், மரங்களின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்ததாகவும் இதன்போது, வாழை மரத்தின் இலை ஒன்று, அதிசக்திவாய்ந்த மின் கம்பத்துக்கு அருகே சென்றதனால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அதனை மறுத்த மின்சாரசபை ஊழியர்கள், 'இச்சம்பவத்தின்போது எவரேனும் அருகில் இருந்திருந்தால் உயிராபத்து ஏற்பட்டிருக்கும்' என தெரிவித்தனர்.
விபத்தினால் தோட்டத்தின் ஒரு பகுதியும் வீட்டினுள் மின் உபகரணங்கள் பொறுத்தப்பட்டிருந்த இடங்களும் எரிந்துள்ளன.
இதனால் ஏற்பட்ட நட்;டத்தை இன்னும் மதிப்பிடவில்லை எனவும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago