Sudharshini / 2016 மே 05 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதிஸ்
பெல்மடுல பிரதேசத்தில் மது அருந்திவிட்டு அநாகரிகமாக நடந்துகொண்டதாக கூறப்படும் அம்பிட்டிய ரத்தன ஜோதி (வயது 48) என்ற தேரரை பொகவந்தலாவை பொலிஸார் புதன்கிழமை(4) இரவு கைதுசெய்துள்ளனர்.
பெல்மடுலை, போதிமா விகாரையைச் சேர்ந்த குறித்த தேரர், விகாரையை அபிவிருத்தி செய்ய வேண்டுமென கூறி நோர்வூட், மஸ்கெலியா பொகவந்தலாவை போன்ற பிரதேசங்களில் பணத்தை வசூலித்தாகவும் வசூலிக்கப்பட்ட பணத்தை கொண்டு மது அருந்துவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்தே மேற்படி தேரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026