2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

அனைத்து பிரதேசங்களுக்கும் சகல வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம்

Sudharshini   / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், சகல வசதிகளுடன் கூடிய  விளையாட்டு மைதானங்களை அமைத்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு 43 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியும், சனிக்கிழமை (20)  இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,'எமது விளையாட்டு வீரர்கள் திறமை மிக்கவர்கள் என்று கடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நிரூபித்துள்ளனர். எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை இலக்கு வைத்து, நாங்கள் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

நாட்டில் சகல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் சகல வசதிகளும் கொண்ட ஒரு விளையாட்டு மைதானத்தை பெற்றக் கொடுப்பதுடன், சகல மாவட்டங்களுக்கும் மாகாணங்களுக்கும் ஏற்ற விதத்;தில் மைதானங்கள் அமைத்துக் கொடுக்கப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் இலைமறை காயாக ஒழிந்திருக்கும் விளையாட்டு வீரர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு தகுந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு களத்துக்கு அனுப்பப்படவுள்ளனர்.

இவ்வருடம் 375,000 மாணவர்களைப் பரீட்சித்து விளையாட்டுக்காக ஒரு குழுவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்' என அவர் தெரிவித்தார்.

'அதேநேரம், பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களைத் தெரிவு செய்து, அதில் இரு விளையாட்டு வீரர்களை, இக்குழுவுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .