Editorial / 2018 நவம்பர் 12 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
அம்பகமுவ மற்றும் அதனை அண்மித்தப் பிரதேசங்களில், 148 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் மேற்படி அபிவிருத்தித் திட்டங்களை, இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அம்பகமுவ பிரதேச சபை தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு அமைவாக, மேற்படி அபிவிருத்தித் திட்டங்களுக்காக, 26 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் ஜயசிங்க பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், விலைக்கு வாங்கும் செயற்றிட்டங்கள் - 54 மற்றும் கட்டுமானப் பணிகளை முன்னெடுக்கும் செயற்றிட்டங்கள் 94 உள்ளடங்குவதாகத் தெரிவித்ததோடு, இந்த அபிவிருத்தித் திட்டங்களை, இவ்வருட இறுதிக்குள் நிறைவுசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.
47 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
01 May 2026