Freelancer / 2023 ஜனவரி 05 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, தங்கொல்ல உரவல பிரதேசத்தில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளரால் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதுடன், இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் தம்புத்தேகம மற்றும் மாத்தளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் 35 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டியில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் குறித்த நபர், கண்டி பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் வெளி இடங்களிலும் இவ்வாறான பல விபச்சார நிலையங்களை இயக்கி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். R
55 minute ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
9 hours ago