Sudharshini / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்
டைனமைட், பட்டாசுகளை பயன்படுத்தி, மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் இவ்வாறு மீன்பிடிப்பதால் அரிய இன வகை மீன்கள் அழிவடையும் நிலை தோன்றியுள்ளதாகவும் சுற்றாடலியலாளர்கள்; கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஹாவலி கங்கை, கன்னொருவையில் இருந்து ஹல்ஒலுவை வரையிலும் உள்ள பகுதியில் டைனமைட், பட்டாசுகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதனால், இப்பிரதேசத்தில் மட்டுமே காணப்படும் அரியவகை மீன் இனங்கள் அழிந்து வருகின்றன. வெளி பிரதேசங்களில் இருந்து வருபவர்களே இவ்விடத்தில் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அவ்வப்போது வந்து போவதனால் பொலிஸாருக்கு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது.
சில மீனினங்கள் இவ்விடத்தில் மட்டுமே வாழ்வதால் அவை அழிந்துபோகாது காக்க வேண்டியது எமது பொறுப்பாகும். எனவே, பொதுமக்கள் டைனமைட், பட்டாசுகளை பயன்படுத்தி இவ்விடத்தில் மீன்பிடிப்பதை தவிர்க்க வேண்டுமென சுற்றாடலியலாளரான பிரதீப் சமரவிக்கிரம கோரிக்கை விடுத்துள்ளார்.
7 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
10 Apr 2026