Sudharshini / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் நகரிலுள்ள அலைபேசி விற்பனை நிலையமொன்றுக்கு அலைபேசி வாங்குவதற்கு வந்த பெண்ணொருவர், 3,000 ரூபாய் பெறுமதியான ஓர் அலைபேசியை விலைகொடுத்து வாங்கி, குறித்த நிலையத்துக்கு அலைபேசி வாங்க வந்த மற்றுமொரு இளைஞனின் 3,000 ரூபாய் பெறுமதியான மின்குமிழ் இருந்த பையைத் திருடிய சம்பவம், சீ.சீ.ரி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் அலைபேசி விற்பனை நிலையத்துக்கு வந்து 15 நிமிடங்கள் இருந்த இப்பெண், புதிதாக வாங்கிய அலைபேசியையும் இளைஞனின் பையையும் எடுத்துக்கொண்டு வெளியேறியுள்ளார்.
இளைஞன், புதிதாக அமைத்த வீட்டுக்கு போடுவதற்காக வாங்கிய மின்குமிழ்களே திருட்டுப் போயுள்ளன.
புதிதாக அலைபேசியை வாங்கிய இளைஞன், மின்குமிழ்கள் வைத்திருந்த பையைத் தேடும் பொழுது அது காணாமால் போயிருப்பதைத் தெரிந்துகொண்டு கடை உரிமையாளரிடம் இது தொடர்பில் முறையிட்டுள்ளார்.
அதன்பின்னர், சீ.சீ.ரி.வி கெமராவைப் சோதித்தபோது மேற்குறிப்பிட்ட விடயம் அம்பலமாகியுள்ளது.
எனினும், குறித்த பெண்ணைத் தேடும் போது அப்பெண் தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago