Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அரச நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்றுச் சென்ற பெண்களின் பணம் மற்றும் நகைகளை அபகரிக்கும் நோக்கில், மோசடி கும்பலொன்று செயற்பட்டு வருகின்றதெனவும் எனவே, இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கண்டி, கட்டுகஸ்தோட்டை ஆகிய பிரதேசங்களை மையமாகக் கொண்டே, மேற்படி கும்பல் செயற்பட்டு வருகிறது.
இந்தக் கும்பல், அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச் சென்ற பெண்கள் இருக்கும் வீடுகளை தேடிச் செல்வதுடன், அந்தப் பெண்களுக்கு ஓய்வூதிய பணம் அதிகமாக இருப்பதாகவும், அதனை பெற்றுக்கொள்வதற்கு, ஒரு தொகை பணத்தை செலுத்துவேண்டும் என்று கூறி, பெண்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளைச் சூறையாடி செல்வதாக, பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனவென்றும் குறித்த நபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago