2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆட்டுக்கு இலை வெட்ட சென்றவர் சடலமாக மீட்பு

Janu   / 2025 மார்ச் 12 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ, லெச்சுமி தோட்டம் மத்திய பிரிவு பத்தாம் இலக்க தேயிலை மலைக்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து செவ்வாய்க்கிழமை (11) அன்று ஆண் ஒருவர் சடலமாக  மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.   

பொகவந்தலாவ லெட்சுமி தோட்டம் மத்திய பிரிவை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 57வயதுடைய சிவனு பாக்கியநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர்  ஆட்டுக்கு ​இலை வெட்டுவதற்காக சென்ற நிலையில் இரவு ஏழு மணி வரை வீடு திரும்பாததால் தோட்ட பொதுமக்கள் இணைந்து அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, அவர் கால்வாய் ஒன்றில் விழுந்து கிடந்ததை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதற்கமைய சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக  டிக் ஓயா கிழங்கின் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது 

எஸ்.சதீஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X