Kogilavani / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவங்ச
மஹியங்னை, தம்பன குருகும்புரப் பகுதியில், ஆதிவாசியொருவர் தனது மாமாவைக் கல்லாலேயே அடித்துக்கொலை செய்ததயைடுத்து சந்தேகநபரை, நேற்று வியாழக்கிழமை (19) கைதுசெய்துள்ளதாக மஹியங்கனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாமனாருக்கும் மருமகனுக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து, மருமகன் மாமனாரின் தலையில் கல்லால் தாக்கியுள்ளார். இதன்போது பலத்த காயமடைந்த மாமனார், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
68 வயதுடைய உனாபன வாரிகே திசாஹாமி என்பவரே இச்சந்தர்ப்பத்தின் போது உயிரிழந்துள்ளார். இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .