Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 18 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் தாயாரான இராஜேஸ்வரி இராமநாதன் தொண்டமானின் மறைவுக்கு, மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
மலையகத்தின் தோட்டப் பகுதிகளிலுள்ள ஆலயங்களிலும், பொது இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் ஹட்டன், கொட்டகலை, மஸ்கெலியா, பொகவந்தலாவை, நோர்வூட், தலவாக்கலை, அக்கரப்பத்தனை, டயகம போன்ற பகுதிகளிலும் மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பத்தனை கெலிவத்தை தோட்டத்தில் வெள்ளைக்கொடி பறக்கவிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது தோட்ட பொதுமக்கள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .