Sudharshini / 2016 மே 03 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், ரஞ்சித்ராஜபக்ஷ, எஸ்.கணேசன்
ஹட்டன், மஸ்கெலியா பிரதான வீதியில் நோர்வூட் அயரபி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்த 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (03) பிற்பகல் 2.30 மணியளவில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
மஸ்கெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணிகளை ஏற்றிவந்த தனியார் பஸ்ஸொன்று, திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குளாகியுள்ளது.
இதில் பாடசாலை மாணவர்கள் 12 பேரும் ஆசிரியர்ககள் நால்வரும் பயணிகள் இருவர் அடங்கலாக 21 பேர் காயமடைந்துள்ளனர். நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

8 minute ago
19 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
20 minute ago