சிவாணி ஸ்ரீ / 2017 ஜூன் 05 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
9,720 குடும்பங்களுக்கு, அவர்களின் அவசர தேவைகளுக்காக நிதியுதவி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ குழு தெரிவித்தது.
மேற்படி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உதவி வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல், அனர்த்த முகாமைத்துவ குழுவின் ஏற்பாட்டில் அயகம கங்காராம விகாரையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விசேட கலந்துரையாடலின் போதே, அனர்த்த முகாமைத்துவ குழு இவ்வாறு தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தத்தமது விவரங்களை கிராமசேவகர் மூலம் அயகம பிரதேச செயலாளருக்கு வழங்குமாறு அனர்த்த முகாமைத்துவ குழு மேலும் கோரியது.
அயகமவில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 18 பேர் பலியானதுடன், 57 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, 9,810 குடும்பங்களை சேர்ந்த 37,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago