Janu / 2026 ஏப்ரல் 23 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி பொது சந்தை வளாகத்தில் வியாழக்கிழமை (23) அதிகாலை ஏற்பட்ட தீ பரவலில் சுமார் 90 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று அடுக்குகளை கொண்ட இந்த சந்தை வளாகத்தின் இரண்டாவது மாடியிலேயே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இங்கு சில்லறை மற்றும் மொத்த விலையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பல கடைகள் தீயினால் முற்றாக அழிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரத்தினபுரி மாநகர சபை மற்றும் பலாங்கொடை நகர சபை ஆகியவற்றின் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து செயற்பட்டனர்.


32 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
36 minute ago
2 hours ago