2026 ஜனவரி 21, புதன்கிழமை

இரத்தினக்கல் வியாபார நிலையங்கள் மூடப்பட்டன

Kogilavani   / 2021 மே 06 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஷ்வரி

இரத்தினபுரி மாவட்டத்தில்  கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருவதால் இரத்தினபுரி நகரிலுள்ள இரத்தினக்கற்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும்  சுகாதார துறையினரின் அறிவித்தலுக்கமைய காலவரையரையின்றி மூடப்பட்டுள்ளதாக  நகர மேயர் ரிரோன் அத்தநாயக்க தெரிவித்தார்.

வீதிகளில் கூட்டமாக நின்று இரத்தினக்கல் வியாபாரம்' செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி இந்த இரத்தினக்கற்கள் வியாபாரத்தை முன்னெடுப்பர் என்றும் எனவே இது கொரோனா வைரஸ் பரவலை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X