உமாமகேஸ்வரி / 2019 மே 20 , பி.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஹங்கம்மான மலைப் பகுதியிலிருந்து, இரத்தினபுரி நகரத்தை, ட்ரோன் கமெரா மூலம் காணொளி, படம் பிடித்துக்கொண்டிருந்த மூவரை, இரத்தினபுரி பொலிஸார், நேற்று (19) இரவு கைது செய்துள்ளனர்.
பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலொன்றையடுத்தே, இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்களிடமிருந்த ட்ரோன் கமெரா உள்ளிட்ட சில ஆவணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், பொலிஸார், அவர்களது கடமையை முறையாகச் செய்யவில்லை என்று கூறியும் கைது செய்யப்பட்ட மூவரையும் உடனடியாக இராணுவத்திடம் ஒப்படைக்குமாறு கோரியும் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால், சுமார் 300 பேர் திரண்டு, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
9 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago