Niroshini / 2021 மே 10 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி மாவட்டத்தின் 10 பிரதேச செயலக பிரிவுகளில், மண்சரிவு அச்சுறுத்தல் நிலவுவதாக, தேசிய கட்டிட ஆராய்ச்சிகள் நிறுவனத் தில் இரத்தினபுரி மாவட்ட காரியாலய அதிகாரிகள், இன்று (10) தெரிவித்தனர்.
இது குறித்து குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளது பிரதேச செயலாளர்கள் மூலம் உரிய கிராம சேவை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறினர்.
இப்பிரதேச செயலக பிரிவுகளில் ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கமைய, இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும், சில குடும்பங்கள் இன்னும் வசித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பலாங்கொடை கல்வி வலயத்துக்குட்பட்ட இ/மஸ்ஸென்ன மகா வித்தியாலத்தின் வகுப்பறைக் கட்டடம், இன்று (10) ஏற்பட்ட மண்சரிவில் முழுமையாக சேதமடைந்துள்ளது.
இதையடுத்து, குறித்த பாடசாலைக் காணியை அடுத்துள்ள காணிகளில் வசித்து வந்த 8 வீடுகள் மண்சரிவு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த 8 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் இக்கிராமத்தில் உள்ள விகாரையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago