சிவாணி ஸ்ரீ / 2017 ஜூன் 06 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மாவட்டத்தில், 556 இடங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாகவும் 202 இடங்களில் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் இரத்தினபுரி மாவட்ட புவியியல் ஆய்வு அதிகாரி அபித வனசுந்தர தெரிவித்தார்.
மேலும் 300 இடங்களில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இரத்தினபுரியில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,
“எமது அலுவலகத்தைச் சேர்ந்த 16 பேர் அடங்கிய எட்டு குழுவினர், இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிவித்திகளை, பெல்மதுளை, எஹலியகொடை, குருவிட்ட, கிரியெல்ல, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலையில், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளிலிருந்து 1,200 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டள்ளனர்.
இது தொடர்பிலான ஆய்வறிக்கை வெகுவிரைவில் அதிகாரிகளிடம் சமர்பிக்கப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.
27 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
7 hours ago