2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இரவில் நடமாடும் சிறுத்தையால் குடாகம மக்கள் அச்சத்தில்

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

ஹட்டன்- குடாகம பிரதேசத்தில் சிறுத்தையொன்று, உலவித் திரிவதால், பிரதேசவாசிகள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

6ஆடி நீளமான குறித்த சிறுத்தை இரவு நேரத்தில் மக்கள் இருப்பிடங்களுக்கு வந்துச் செல்வதாகவும் பிரதேசவாசிகள்  தெரிவிக்கின்றனர்.

இதனால் இரவு நேரங்களில் அவசரமாக வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பலரது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களும் காணாமல் போவதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த சிறுத்தையால் தமக்கு பாதிப்பு ஏற்படும் முன்னர், அதனைப் பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .