2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இருவேறு விபத்துகளில் இருவர் பலி

Kogilavani   / 2017 ஜூலை 23 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

நாவலப்பிட்டி மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில், சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் ஏற்பட்ட இருவேறு விபத்துகளில், இருவர் பலியாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி - கண்டி பிரதான வீதி, உலப்பனை கடோல்போக்கு பகுதியில், இன்றுக்  காலை இடம்பெற்ற விபத்தில், இளைஞரொருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக, நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

நாலவப்பிட்டியிலிருந்து கம்பளை நோக்கிச்சென்ற மோட்டார் சைக்கிள், ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்டபோது, எதிரே வந்த லொறியுடன் மோதுண்டதில், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

லொறியுடன் சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வெல்லவாய, தனமல்வில வீதி, புதுருவகல பாலத்துக்கு அருகில், சனிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், தேலுல்ல, எதிலிவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்சலாகே உபாலி (வயது 31) என்பவர் பலியாகியுள்ளதாக, வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளானது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இளைஞன், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X