2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

இருவேறு குளவிக் கொட்டுச்சம்பவங்கள்: 12 பேர் பாதிப்பு

Kogilavani   / 2016 ஜூலை 28 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா          

பதுளைக்கு உட்பட்ட இருவேறு பகுதிகளில், இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற இருவேறு குளவிக் கொட்டுச்சம்பவங்களில்  12 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் கல்விக் கற்றுவரும் 3 மாணவிகள் உட்பட 11 பேர், அம்பிட்டிகந்த தோட்டத்திலிருந்து பாடசாலைக்குச் சென்றுக் கொண்டிருந்தபோது குளவிக் கொட்டுக்குள்ளாகிய நிலையில் கொஸ்லாந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இதல்கஸ்ஹின்ன தோட்டத்தைச்சேர்ந்த ஏ.எம்.குமாரிஹாமி (வயது 50) என்ற 5 பிள்ளைகளின் தாயொருவரும் குளவிக் கொட்டுக்குள்ளான நிலையில் ஹல்துமுல்லை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .