2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

இளம் காதல் ஜோடிக்கு விளக்குமறியல்

Sudharshini   / 2016 மார்ச் 13 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

காமினி பண்டார

பூசைத்தட்டில் வைக்கப்பட்டிருந்த  1,124 ரூபாய் 75 சதத்தைத் திருடிய குற்றச்சாட்டில் கைதான இளம் ஜோடியை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் பதில் நீதவான் ஏ.ராஜேந்திரன் சனிக்கிழமை (12) உத்தரவிட்டார்.

கண்டி, தலவத்த, கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த காதல் ஜோடியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஜோடியானது, நல்லதண்ணி- சிவனொளிபாத மலை வீதியில் அமைந்துள்ள மகர தோரண விகாரையில், புத்தர் சிலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த  பூசைத்தட்டிலிருந்து  1,124 ரூபாய் 75 சதத்தை திருடி விட்டு, பூசைத் தட்டையும் எறிந்துவிட்டுச் சென்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் விகாராதிபதி உடனடியாக பொலிஸில்  முறையிட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் விகாரையில் பொறுத்தப்பட்டிருந்த சீசீடிவி கெமராவின் உதவியுடன் மேற்படி காதல் ஜோடியை கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .