Sudharshini / 2016 மே 05 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
அகுரஸ்ஸ, லத்துவ பிரதேசத்தில் நில்வலா கங்கைக்கு அருகிலிருந்து, மேற்படி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான இந்திரஜித் புஸ்பகுமார என்ற இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, மேற்படி இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த ஒன்பது தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அகுரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
40 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
51 minute ago
1 hours ago