2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இ.தொ.கா அதிருப்தி

Kogilavani   / 2017 மார்ச் 10 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நியமனம் தொடர்பில் இ.தொ.கா தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுப் பெற்றதையடுத்து, பணிப்பாளர் சபையின் அங்கிகாரமின்றி அவரது வெற்றிடத்துக்கு பிறிதொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது, ஜனநாயக மரபுகளையும் மீறி தன்னிச்சையாக மேற்கொண்ட நியமனமாகும் என, இ.தொ.காவின் உப தலைவர்  எஸ்.அருள்சாமி தெரிவித்துள்ளார்.

இ.தொ.கா சௌமிய பவனில், நேற்று நடைபெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கூறிய அவர்,

'இந்த நம்பிக்கை நிதியத்துக்கு சில பாரம்பரியங்கள் உள்ளன. எவரொருவர் நியமிக்க வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும் என்றெல்லாம் பணிப்பாளர் சபையே தீர்மானிக்க வேண்டும்.

இது ஒருக் கட்டமைப்பு. இந்த கட்டமைப்பை மீறியதாக அமைச்சரின் செயற்பாடு காணப்படுகின்றது' என குறிப்பிட்டுள்ளார்..


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .