Kogilavani / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச மகளிர் தின விழா, எதிர்வரும் 13 ஆம் திகதி தலவாக்கலை நகரில் நடைபெறவுள்ள நிலையில், இந்நிகழ்வில் பங்கேற்பவர்களுக்காக போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இ.தொ.கா. அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியா, சிங்கப்பர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் பெண் சொற்பொழிவாளர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா மகளிர் பிரிவு இயக்குனர் திருமதி.ஜே.தேவமாக்கிரட் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
'இ.தொ.கா வின் மகளிர் தின விழா, மலையக வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தை வகிக்கப்போகிறது. பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மலையகப் பெண்கள் மலையகத்தின் பல பாகங்களிலிருந்தும்; கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ்விழாவின், சிறப்பம்சமாக வெளிநாடுகளிலிருந்து சிறப்பு சொற்பொழிவாளர்களாக பெண்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர். மகளிர்தின விழாவை மேலும் சிறப்படையச் செய்யும் முகமாக பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மகளிர் பேரணி, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு ; பரிசளிப்பு, மலையக கலை, கலாசார நிகழ்வுகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சமூக மாற்றங்களுக்காக ஒன்றிணையும் பெண் அமைப்புகளை, பெருந்திரளாக கலந்துகொள்ள இ.தொ.கா மகளிர் பிரிவு அழைப்பு விடுக்கின்றது. சகல மாவட்டங்களிலிருந்து கலந்துகொள்ளும் பெண்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
கவிதை கட்டுரை ஆகிய திறந்த மட்ட போட்டிகளில் பங்கு கொள்வோர் தமது ஆக்கங்களை கால தாமதமின்றி அனுப்பி வைக்குமாறு போட்டி இணைப்புக்குழு கேட்டுகொள்கிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
6 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
10 Apr 2026