Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களது மயான பூமியில், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைதாரிகளின் உடற்பாகங்களைப் புதைப்பதை, மட்டக்களப்பில் வாழும் தமிழர்கள் மாத்திரமன்றி, இலங்கையில் வாழும் அனைத்து எந்தத் தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியது என, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, கள்ளியங்காடு இந்து மயானத்தில் கடந்த 26ஆம் திகதி, தற்கொலைதாரியான மொஹமட் அஸாத்தின் உடற்பாகங்கள் இரகசியமாக புதைக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்தச் சம்பவம், எல்லாத் தமிழர்கள் மத்தியிலும் வேதனையளிப்பதாகவும் இதன்மூலம் தமிழ் மக்களின் பாரம்பரிய வழிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன என்றும் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கமையவே இச்சம்பவம் இடம்பெற்றிருந்தாலும், அரச தரப்பு வழக்கறிஞரும் பொலிஸாரும், மக்களுக்குத் தௌவுபடுத்தவில்லை என்றும் அவர்களது இந்த அலட்சியப் போக்குக்கு, கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மட்டக்களப்பு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல்வாதிகள், உடனடியாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்து, புதைக்கப்பட்ட உடல்பாகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
27 minute ago
43 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
43 minute ago
50 minute ago