Editorial / 2023 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

உணவு ஒவ்வாமை காரணமாக சுகயீனமுற்ற பாடசாலை மாணவர்கள் அறுவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பசறை மீதம்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை (16) பாடசாலை மதிய இடைவேளையின் போது குறித்த மாணவர்களில் ஒரு மாணவன் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை ஆறு பேரும் பகிர்ந்து உண்டனர். அதன்பின்னரே அவர்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு, வயிற்று வலியால் துடித்து வாந்தி எடுத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ஆறு மாணவர்களும் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு. வைத்தியசாலை 2 ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமு தனராஜா
1 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago