2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 26 மாணவர்கள் வைத்தியசாலையில்

Sudharshini   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

பொகவந்தலாவை, டின்சினன் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 4இல் கல்வி கற்கும் 26 மாணவர்கள், உணவு ஒவ்வாமை காரணமாக  பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் இன்று (18) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 11 மாணவர்களும் 15 மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என பொகவந்தலாவை வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சத்து உணவு திட்டத்தின் கீழ் இப்பாடசாலையில் இன்று காலை வழங்கப்பட்ட பால்சோறு மற்றும் கிழங்கு கறி என்பவற்றை உட்கொண்ட மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து பாடசாலைக்கு விரைந்த பொகவந்தலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர், மாணவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .