2026 ஜனவரி 21, புதன்கிழமை

உரத்தட்டுப்பாடு குறித்து ஆராய்வு

Niroshini   / 2021 மே 10 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்

இராசாயன பசளையை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் இரசாயன பசளை விற்பனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இவ்விடயம் குறித்து நுவரெலியாவில் உள்ள விவசாயிகள் மற்றும் பசளை விற்பனையாளர்கள் உள்ளிட்ட நுவரெலியா மத்திய பொருளாதார வர்த்தகர் சங்கத்தினர், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட காரியாலயத்தில், இன்று (10) காலை இடம்பெற்றது.

இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதன்போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X