Kogilavani / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
கண்டியில் கடந்த 15ஆம் திகதி ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
லண்டனிலுள்ள மஸ்ஜிதுல் ஜன்னா மற்றும் கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் அனுசரணையுடன் கண்டி மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனம், கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபை மற்றும் கண்டி கட்டுக்கலை பள்ளிவாயல், மிஸ்க் இளைஞர் அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
உலருணவு பொதிகளுடன் தலா ஒவ்வொரு குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான நிதி உதவியும் வழங்கப்பட்டன.
இதன்போது 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலருணவப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கண்டி கட்டுக்கலை பள்ளிவாசல் நிர்வாக உத்தியோகத்தர்கள், கட்டுக்கலை மிஸ்க் வாலிப சங்கத்தினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago