2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் சாரதி பலி

Editorial   / 2017 ஜூன் 30 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன்

கினிகத்தேனை களவால்தெனிய பகுதியில், உழவு இயந்திரமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலியாகியுள்ளதாக, கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இவ்விபத்தில், பாணந்துறையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமந்த பெரேரா (வயது -44)  என்பவரே, உயிரிழந்துள்ளார்.

களவால்தெனியவிலுள்ள  மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றி வந்த இவர், மின்நிலையத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டட வேலைக்காக, உழவு இயந்திரத்தில் மணலை ஏற்றிக்கொண்டுச் சென்ற போதே விபத்துக்குள்ளாகியுள்ளார்.

உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி இழுத்துச் சென்றதால் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த சாரதியை, வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றபோதிலும் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .