Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
மத்திய அரசாங்கத்தை போன்று ஊவா மாகாண சபையிலும் கடந்த திங்கட்கிழமை(8) முதல் கூட்டாட்சி ஆரம்பமாகியுள்ளது. இம்மாகாண சபையில் மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சார்ந்தவர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த உபாலி சமரவீர, அமைச்சராக திங்கட்கிழமை(8) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இதற்கூடாக மத்திய அரசை போன்று ஊவா மாகாணசபையிலும் தேசிய ஆட்சி முறை நடைபெற்று வருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் எண்ணக்கருவுக்கமைய, மேற்படி ஆட்சி முறைமை ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஊவா மாகாணத்தில் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மாகாண அமைச்சர்களான செந்தில் தொண்டமான், சாலிய சுமேத, குமாரசிரி ரட்ணாயக்க ஆகியோர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இம்மாகாண சபைக்கு ஒரேயொரு அமைச்சர் மட்டும் நியமிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.
இதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவரையே, நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் தலைமையில் ஐ.தே.கவைச் சார்ந்த உபாலி சமரவீர, ஊவா மாகாண சபையின் காணி, கால்நடை அபிவிருத்தி, நன்னீர் மீன்பிடிவளர்ப்பு, விவசாயம், நீர்ப்பாசன அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025