2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

எட்டு மாடுகள் மீட்பு; இருவர் கைது

Kogilavani   / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.புவியரசன்

பசறை- நமுனுகுல வீதி, பிபிலேகம கிராமத்தில் இருந்து சட்டவிரோதமாக பதுளைக்கு கடத்திவரப்பட்ட எட்டு மாடுகளை மீட்டுள்ள பசறை பொலிஸார், கடத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட லொறியையும் கைப்பற்றியுள்ளனர். 

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பசறை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, பதுளை- பசறை வீதி 10ஆம் கட்டை பகுதியில் வைத்து, நேற்று முன்தினம் (23) லொறியொன்றை வழிமறித்து சோதனையிட்டபோதே, மாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.  

இதன்போது லொறியின் சாரதியும் அவருடன் இருந்த நபரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.         

இறைச்சியாக்குவதற்காகவே குறித்த மாடுகள் கடத்தப்பட்டுள்ளன என்று, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X