Freelancer / 2023 ஜனவரி 12 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.ஹேவா
அம்பகமுவ பிரதேச சபையின் ஊடாக 2011 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட புளியாவத்தை (ஹொன்ஸி) ரவிந்திரன் சிறுவர் பூங்காவின் பெயரை மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதற்கெதிராக முறைப்பாடு செய்வேன் என அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எம்.இரவீந்திரன் தெரிவித்தார்.
இந்த முயற்சி, நோர்வூட் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அம்பேகமுவ பிரதேச சபையின் தலைவராக நான் பணியாற்றிய காலத்தில், அப்போது மத்திய மாகாண உறுப்பினராக இருந்த கே.கே.பியதாஸ, நிதியுதவியுடன் இந்த சிறுவர் பூங்கா நிர்மாணிக்கப்பட்டது.
அன்றிலிருந்து 2017 வரையிலும் அம்பேகமுவ பிரதேச சபையின் ஊடாக இந்த சிறுவர் பூங்கா நிர்வகிக்கப்பட்டது. அந்த பூங்கா நோர்வூட் பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் 2018ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
அதன்பின்னர், இன்று வரையிலும் மூடப்பட்டு கிடக்கிறது. எனினும், நோர்வூட் பிரதேச சபையின் ஊடாக அந்த பூங்காவின் பெயரை மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பில் மத்திய மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுச் சென்று முறைப்பாடு
செய்வேன் என்றும் ரவீந்திரன் மேலும் தெரிவித்தார். R
1 hours ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
16 Jan 2026