Editorial / 2026 மார்ச் 22 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

(22ஆம் திகதி காலை ஹற்றன் நகரில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று மூடப்பட்டிருந்த காட்சியை படத்தில் காணலாம்.)
சுதத் எச். எம். எச். ஹேவா
ஹற்றன் நகருக்குத் தேவையான எரிபொருள் கையிருப்புகள் முறையாகக் கிடைக்காத காரணத்தினால், நகரின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இது குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவரிடம் வினவியபோது, தாம் முன்கூட்டியே கட்டளையிட்ட (Order செய்த) பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்புகள் உரிய நேரத்தில் கிடைக்காததால், நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டமையால், தமக்குரிய தினத்தில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதாக வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய தட்டுப்பாடு தங்களை மேலும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
15 minute ago
25 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
37 minute ago