Mithuna / 2024 ஜனவரி 21 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாக எரிந்து சாம்பலான சம்பவம் ஒன்று பன்விலை பொலிஸ் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை (21) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

பன்விலை புரன்கும்புர கிராமத்தில் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அதிகாலை வேளையில் பற்றி எரிந்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுக் காருக்கும் தீ பரவி சிறிது சேதமடைந்துள்ளது.
அவ்விடத்திலிருந்து வீட்டார் காரை அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து மேலும் தீ பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பில் பன்விலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் திட்டமிடப்பட்ட சம்பவமா ?அல்லது விபத்தா ?என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
25 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
41 minute ago
2 hours ago