R.Maheshwary / 2022 மே 23 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில், கேகாலை நகரை அண்மித்த பகுதிகளில் ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களின் எரிபொருள் தாங்கிகளை வாடகைக்கு விடும் வியாபாரம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் கேன்களில் எரிபொருள் வழங்கப்படாது என தீர்மானிக்கப்பட்டதன் பின்னர், இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தாங்கி 200 ரூபாய்க்கும் ஓட்டோவின் தாங்கியை 300 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றது.
எரிபொருள் நிரப்பப்பட்டதும் வெற்றுத் தாங்கி வாடகைப் பணத்துடன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கேகாலை நகரிலிருந்து சற்று தொலைவிலுள்ள கிராமங்களில் பெட்ரோல் 600 தொடக்கம் 800 ரூபாய் வரை விற்பனை செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது.
27 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago