Freelancer / 2022 மார்ச் 05 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
ஹட்டன் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ மக்கள் இன்றும் (05) நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அத்துடன், வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இதனால் நகர் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
நாடளாவிய ரீதியில் டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹட்டன் நகரிலுள்ள எரிபொருள் நிலையத்திலும் டீசல் இருக்கவில்லை. சுமார் 4 நாட்களுக்கு பிறகு இன்றைய தினமே டீசல் விநியோகிக்கப்படுகின்றது.
சுமார் 20 லீட்டர் கேன்களுடன் சாரதிகள், நீண்ட வரிசையில் காத்திருந்து டீசலை வாங்குவதை காணமுடிந்தது. பாதுகாப்பு கடமையில் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் ஒரு சிலர் வரிசையில் நின்று, டீசலை வாங்கிச்சென்று, அதனை அதிக விலைக்கு விற்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. (R)





5 minute ago
14 minute ago
20 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
20 minute ago
26 minute ago