2025 மே 20, செவ்வாய்க்கிழமை

எரிபொருள் நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடல்

Freelancer   / 2022 ஜூன் 29 , பி.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமோதரை நிருபர்

தற்போதைய எரிபொருள் நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது தனியார் பயணிகள் பொது போக்குவரத்து சேவைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

தனியார் பஸ்கள் மற்றும் சிசு சரிய பஸ்களுக்கு எவ்வித தடையுமின்றி எரிபொருள் வழங்கப்பட வேண்டிய முறை தொடர்பில் ஆளுநர் உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியதுடன் அதற்கான வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மாகாண பிரதான செயலாளரினால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் இலகுரக வாகனங்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களுக்கு  எரிபொருள் வழங்கும் முறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தைத் தடங்கலின்றி தொடரும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின் ஊடாக முறைகேடுகள் செய்து பயனைப் பெற முயற்சிக்கும் நபர்களுக்கு எரிபொருள் வழங்குவதை இடைநிறுத்தவும் இதன்போது ஆளுநர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.(a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X