2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

எல்டப் மேற்பிரிவு தோட்டப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 03 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த எல்டப் மேற் பிரிவு தொழிற்சங்க பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டது என பாராளுமன்ற  உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

எல்டப்  மேற்பிரிவு பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்தும் முகம் கொடுக்கின்ற தொழில் பிணக்குகளுக்கு  தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், அங்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டதோடு தோட்ட முகாமையாளர்கள் உத்தியோகத்தர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றும்  தோட்டத் தொழிலாளர்கள்  முன்னிலையில் இடம்பெற்றது.  

இதன்போது தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை தோட்ட அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியதுடன்,  பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து வைப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது .

வழங்கப்பட்ட  கால அவகாசத்துக்குள் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுமென தோட்ட அதிகாரி உறுதியளித்ததாக வடிவேல் சுரேஸ் எம்.பி தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X