Janu / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டை உலுக்கிய எல்ல , வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்த எமது உறவுகளின் ஆத்மா சாந்திக்காகவும் விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் உறவுகள் சீக்கிரம் குணமடைய வேண்டியும் விசேட கூட்டுப் பிரார்த்தனை ஒன்று லிந்துலை, சென்றகிலாஸ் தோட்டத்தில் திங்கட்கிழமை (07) முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தோட்ட பொதுமக்கள் இளைஞர்கள் அறநெறி பாடசாலை மாணவர்கள் உட்பட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன்இதன்போது உயிரிழந்த உறவுகளுக்கு விளக்கேற்றி மெழுகுவர்த்தி கொளுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இங்கு இடம்பெற்ற அஞ்சலி கூட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வாகன சாரதிகள் போக்குவரத்து சட்டங்களை மதித்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்
எஸ். சதீஷ்

3 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025