Kogilavani / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
'அனைத்து வைத்தியர்களையும்; நான் விமர்சிக்கவில்லை. வைத்தியர்களின்; தொழிற்சங்கத் தலைவரான வைத்தியர் அனுருத்த பாதெனியவின் செயற்பாட்டை மட்டுமே கண்டித்து உரையாற்றினேன். என்னில் தவறு இருக்குமேயானால் ஏனைய வைத்தியர்கள் மன்னித்துக் கொள்ளுங்களென்று குறுந்தகவல்களை அனுப்பியிருந்தேன். அதற்கு பலர் பதிலளித்திருந்தனர். ஒரு சிலர் பதில் அனுப்பவில்லை' என தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'வைத்தியர்களில் சிலர், தமக்கு தொடர்பு இல்லாத விடயங்களில் ஈடுபட்டு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிராக புரட்சியை மேற்கொள்கின்றனர்.
வைத்தியர்களின் தொழிற்சங்கத் தலைவர் பாதெனிய, தமக்கு சம்பந்தமில்லாத விடயத்தை விமர்சித்தமையால், கீழ்த்தரமான வேலைகளை செய்ய வேண்டாமென்று அவரை நான் கூறியது உண்மைதான். இது எனக்கும் அவருக்குமுள்ள பிரச்சினை. நாடு துரிதமாக அபிவிருத்தியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது, அப்பயணத்தை தடுக்கும் வகையிலேயே, மேற்படி சதி இடம்பெறுகின்றது. வைத்தியர்களின் தேவையற்ற புரட்சி, எமக்கு சவாலானது அல்ல. நாட்டின் அபிவிருத்தியை நோக்கிய பயணம் தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்' என்றார்.
அவர் மேலும் 'பதுளை வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு பிரதமரிடம் நேரடியாகவே கோரியுள்ளேன். இதய நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய இயந்திரம், இவ் வைத்தியசாலையில் இல்லாமை பெரும் குறை. தனியார் நிறுவனமொன்றின் உதவியுடன் 60 மில்லியன் ரூபாய் செலவில், அவ் இயந்திரத்தைப் பெற்றுக் கொடுக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளேன். அது தொடர்பாக, தனியார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருக்கின்றேன்' என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago