Janu / 2026 மார்ச் 25 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா - ஒலிபண்ட் வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை (24) இரவு ஏற்பட்ட தீ, வேகமாக பரவி நானுஓயா - கிளாசோ தோட்டத்திற்கு மேல் பகுதியில் உள்ள காட்டு பகுதியில் புதன்கிழமை (25) அன்றும் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.
இந்த தீப்பரவல் காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் புகையினால் சூழப்பட்டுள்ளதுடன், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மலையகத்தில் தற்போது நிலவும் கடும் வரட்சியான காலநிலையை பயன்படுத்தி, ஒரு சில சமூக விரோதிகள் திட்டமிட்ட முறையில் வனப்பகுதிகளுக்கு தீ வைத்து வருகின்றனர். குறிப்பாக, காட்டு விலங்குகளை வேட்டையாடும் நோக்கிலேயே இவ்வாறான தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறான தீ வைப்புகளினால் அரிய வகை மரங்கள் எரிந்து சாம்பலாவதுடன், காடுகளில் வசிக்கும் விலங்குகள் மற்றும் பறவையினங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. அத்துடன், மலைப்பாங்கான பகுதிகளில் இருந்து ஊற்றெடுக்கும் நீரூற்றுகள் வற்றிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகின்றது.
வனப்பகுதிகளுக்கு தீ வைப்பவர்களை அடையாளம் கண்டால், உடனடியாக அது குறித்து அருகில் உள்ள வனத்துறை அதிகாரிகளுக்கோ அல்லது பொலிஸாருக்கோ தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செ.தி.பெருமாள்


21 minute ago
7 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
7 hours ago
04 Apr 2026