Freelancer / 2026 ஏப்ரல் 05 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள Bushehr அணுசக்தி நிலையம் அருகே அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி வெளியிட்ட தகவலின்படி,
புஷெர் அணு மையம் நேற்று காலை மொத்தம் நான்கு முறை தாக்கப்பட்டது. இந்த தாக்குதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரானின் அரசு ஊடகமான தாஸ்னிம் நியூஸ் ஏஜென்சி தெரிவிக்கையில், அணு நிலையம் அருகே ஏவுகணை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.
ஈரானின் புஷெர் அணு மையம் என்பது அந்த நாட்டில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஒரே அணு மின் நிலையமாகும்.
புஷெர் பகுதி, அணு மின் உற்பத்திக்கு மட்டுமல்லாமல், ஈரானின் தொழில்துறை மற்றும் ராணுவ ரீதியாக மிக முக்கியமான பகுதியாகவும் விளங்குகிறது. இந்த அணு நிலையம் நாட்டின் மின்சார உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதுடன், அதன் புவியியல் அமைப்பும் முக்கியமான பாதுகாப்பு பகுதியாக கருதப்படுகிறது.
இதனால், புஷெர் அணு நிலையம் மீது ஏற்படும் எந்தவொரு தாக்கமும், ஈரானின் ஆற்றல் பாதுகாப்பை மட்டுமின்றி, முழு வளைகுடா பகுதிக்கும் பாதிக்கும் திறன் கொண்டதாக கணக்கிடப்படுகிறது.
இன்றைய தாக்குதல் அணு நிலையத்தின் முக்கிய அமைப்புகளை நேரடியாக பாதிக்கவில்லை என்றாலும், கதிர்வீச்சு பாதுகாப்பு கோணத்தில் இது மிகப்பெரிய கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது. Bushehr அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் ஏற்பட்டிருந்தாலும், தற்போது எந்தவிதமான கதிர்வீச்சு அபாயமும் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அணு மையத்தின் முக்கிய செயல்பாடுகள் பாதுகாப்பாக உள்ளன. இது சர்வதேச அளவில் அச்சத்தை அதிகரிக்கும் செய்தியாக இருப்பதை தாண்டி, எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பயம் ஈரானுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளுக்கும் எழுந்துள்ளது. R
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago