R.Maheshwary / 2023 ஜனவரி 16 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து மாணவனொருவன் உயிரிழந்துள்ளான்.
இவ்வாறு உயிரிழந்த மாணவன் நாவலப்பிட்டி- உடஹின்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவன் என்பதுடன், இவர் நாவலப்பிட்டி- அனுருத்தகுமார தேசிய பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவன் நேற்று (15) காலை நாவலப்பிட்டி நகரில் நடக்கும் பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, தனது வீட்டுக்கு அருகில் இறங்க முயற்சித்து கீழே விழுந்துள்ளார்.
அத்துடன் அருகில் இருந்த மண்மேட்டில் மோதுண்டு பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என குருந்துவத்த பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு ஏழு மணியளவில் பஸ்ஸை நிறுத்துவதற்கு முன்னரே மாணவன் பஸ்ஸிலிருந்து இறங்க முயற்சித்த போதே, இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை பஸ்ஸின் சாரதி குருந்துவத்த பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
9 minute ago
34 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
34 minute ago
21 Mar 2026