R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு கஜமுத்துக்களுடன் கண்டியில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கண்டி நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில், இந்த கஜமுத்துக்களை விற்க முயற்சித்த போதே, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸ் விசேட படையினரின் ஒத்துழைப்புடன் இன்று (23) பகல் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நால்வரும் 24- 26 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இவர்கள் கண்டி- கிரிபத்கும்பர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த கஜமுத்துக்கள் இரண்டும் மொனராகலை பிரதேசத்திலிருந்து தமக்கு கிடைத்ததென சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

26 minute ago
28 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
28 minute ago
59 minute ago